ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கிலிருந்து ரிசார்ட் பதியுதீன் விடுதலை!

Mayoorikka
2 years ago
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கிலிருந்து ரிசார்ட் பதியுதீன் விடுதலை!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காகவே, ​கோட்டாபய தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து 7 மாதங்கள் தடுத்து வைத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே ரிசார்ட் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் தன் மீதும் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். அடுத்த தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைத்து என்னை 7 மாதங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்திருந்தார். 

எவ்வாறாயினும், பதவிக்காலம் முடிவதற்குள் நாட்டு மக்களால் கோட்டாபய ராஜபக்ஷ விரட்டியடிக்கப்பட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் நான் விடுதலை ​அடைந்தேன். உடனடியாக இல்லை என்றாலும் உண்மை கண்டிப்பாக வெற்றிபெறும் எனவும் ரிஷாட் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!