உலகிலேயே மிக ஆபத்தான செடியை வளர்க்கும் பிரிட்டன் நபர்

Prasu
3 years ago
உலகிலேயே மிக ஆபத்தான செடியை வளர்க்கும் பிரிட்டன்  நபர்

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பகுதியை சேர்ந்த நபர், சாதாரண செடிகளை தமது தோட்டத்தில் வளர்ப்பதில் சுவாரசியம் தரவில்லை எனக் கூறி உலகின் மிக ஆபத்தான செடி ஒன்றை வளர்த்து வருகிறார்.

அவுஸ்திரேலியாவில் காணப்படும் அரியவகையான gympie-gympie என்ற மிகவும் ஆபத்தான செடியையே 49 வயதான Daniel Emlyn என்பவர் வளர்த்து வருகிறார். குறித்த செடியின் விதைகளை இணையமூடாக வாங்கிய அவர், தனியாக ஒரு தொட்டிக்குள் வளர்த்து வருகிறார்.

பொதுவாக தோட்டங்களில் இதுபோன்ற செடிகளை வளர்ப்பது ஆபத்து என்பதால், அதன் விதைகளை கவனமுடன் கையாள வேண்டும் என Daniel Emlyn கூறுகிறார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து, சுமார் 60 அவுஸ்திரேலிய டொலர் செலவிட்டு, விதைகளை வாங்கியுள்ளார். குறித்த செடியின் முற்கள் பட்டு காயம் ஏற்பட்டால், அந்த வலி பல வாரங்கள் அல்லது மாதம் வரையில் இருக்கும் எனவும், உயிர் போகும் வலியாக அது இருக்கும் எனவும் Daniel Emlyn கூறுகிறார்.

ஆபத்தான gympie-gympie செடியை வளர்க்கும் அவர், அதனை தற்போது ஒரு கூண்டுக்குள் வைத்துள்ளார். சில முறை காயம்பட நேர்ந்தது எனவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக சிக்கல் ஏதும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4