இலங்கையில் நவம்பர் 8ம் திகதி பகுதியளவிலான சந்திர கிரகணம்!
Nila
2 years ago
எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திரக் கிரகணம் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சந்திரக் கிரகணம் அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கு முழு அளவிலான சந்திர கிரகணமாக தென்படும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, 8 ஆம் திகதி மாலை 5.48க்கு சந்திரன் உதயமாகும் என்பதுடன், சந்திரக் கிரகணத்தின் இறுதி பகுதியை இலங்கையில் காணமுடியும்.
மாலை 6.19க்கு பகுதியளவான சந்திரக் கிரகணம் நிறைவடையும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி மீண்டும் முழு அளவிலான சந்திரக் கிரகணத்தை பார்வையிட முடியும்.