கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று!
Mayoorikka
2 years ago
வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.
அதற்கமைய, அரச அதிகாரிகளுக்கும் உரிய கடனாளிகளுக்கும் இடையிலான குறித்த கலந்துரையாடல் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெறுவதற்கு, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு அதன் பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
இதன்படி, கடனளிப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடனை மறுசீரமைப்பதற்கான ஆதரவைப் பெற எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக முன்னதாக ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் இன்று கூடி ஆராயவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்