கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு!
Mayoorikka
2 years ago
இன்று கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது,
மாணவர்பாராளுமன்றம் என்பது மாணவர் மத்தியில் தலைமைத்துவம் , ஆளுமைமற்றும் ஜனநாயகப் பண்பு விருத்தி என்பவற்றை மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற அமர்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்தநிகழ்வை சமூக விஞ்ஞானபாட ஆசிரிய ஆலோசகர் ஜெ. நிசாகர் தலைமையில் சமூக விஞ்ஞான பாட ஆசிரியர்கள் ஒழுங்குபடுத்தியிருந்தனர்.
நிகழ்வில் பிரதிசெயலாளர் நாயகம் என்ற வகையில் ஆசிரிய ஆலோசகர் தி.சிவரூபன் அவர்களும் செயலாளர்நாயகம் என்ற வகையில் வலயக்கல்விப் பணிப்பாளர் கி. கமலராஜன் அவர்களும் பங்குபற்றியிருந்தனர்.