எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மீண்டும் வரிசை: இதுதான் காரணம்

Prathees
2 years ago
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மீண்டும் வரிசை: இதுதான் காரணம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கிட்டத்தட்ட 80 வீதமான எரிபொருள் தீர்ந்து போயுள்ளது.

இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகளும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான வரிசைகளை உருவாக்குவதற்கு என்ன காரணம், கடந்த முதலாம் திகதி இடம்பெறவிருந்த விலைத் திருத்தம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தேவைக்கேற்ப எரிபொருளை ஆர்டர் செய்யவில்லை என பெற்றோலிய பிரிவினையாளர் சங்கத்தின் உப தலைவர் குசும் சதநாயக்க  தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த வாரத்தில் எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் உள்ளதால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை ஆர்டர் செய்யுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!