விமான பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு விளாடிமிர் புட்டின் உத்தரவு
Kanimoli
2 years ago
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கான விமான பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யாவிற்கும் நட்பு நாடுகளுக்கும் இடையிலான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு இன்று உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் மிகப்பெரிய விமான சேவையான அஸூர் விமானச்சேவை மீண்டும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
300இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் விமானம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.