சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
Nila
2 years ago
ஜேர்மனியில் இருந்து அனுப்பப்பட்ட சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் ஒரு தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருள் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால் மூலம் அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றினை பரிசோதித்த போது போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க மத்திய ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் திரு.சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
அந்த அட்டைப்பெட்டியில் 4,956 மாத்திரைகள் கவனமாக பொதி செய்யப்பட்டிருந்ததாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.