காணாமல் போன வயோதிபர் ஒருவர் தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு
Kanimoli
2 years ago
யாழில் அதிகாலையில் வீட்டில் இருந்து காணாமல் போன வயோதிபர் ஒருவர் தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்றைய தினம் (03-11-2022) கலட்டி கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கலட்டி கரணவாய் கிழக்கை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க வயோதிபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் காணாமல் போனதை அடுத்து அவரது உறவினர்களால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் கரணவாய் பகுதியில் உள்ள கிணற்றில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.