நிதி நெருக்கடியால் முடங்கிய போஷாக்கு பொதித் திட்டம்!
Mayoorikka
2 years ago
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போஷாக்கு பொதிகளை வழங்கும் திட்டம் நிதி நெருக்கடியால் முடங்கியுள்ளதாகவும் அதனை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் கோரப்பட்டுள்ளதாகவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மாதத்துக்குள் அதற்கான மானியங்கள் கிடைக்கப்பெறும் எனவும் அதன் பின்னர் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த போஷாக்கு திட்டத்தின் கீழ் 155,000க்கும் அதிகமான கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 4,500 ரூபா பெறுமதியான போஷாக்கு பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.