மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் விளக்கமறியலில்
கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 6 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கெக்கிராவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.
குறித்த ஆறு மாணவிகள் தொடர்பில் தம்புள்ளை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 6 மாணவிகள் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் கெக்கிராவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சந்தேகத்திற்குரிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எதிர்கால விசாரணைகளை அவதானித்து வருவதாகவும் அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.