கொழும்பில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் கணணி வழங்கி வைப்பு!

Mayoorikka
2 years ago
கொழும்பில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் கணணி வழங்கி வைப்பு!

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR) பணிப்பாளருமான யாழ்,தீவகம் சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்)அவர்களின் நெறிப்படுத்தலில் கொழும்பு மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பிரிவில் கல்வி பயிலும் வறிய நிலை மாணவருக்கு ரூபா மூன்று லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம்(3,75,000.00) பெறுமதியான கணணி ஒன்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பரிசு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி நிகழ்வானது  கொழும்பு.07 ல் அமைந்துள்ள தேசிய நூலக கேட்போர் கூடத்தில் அறக்கட்டளையின் மேல் மாகாண மற்றும் மலையக செயற்பாட்டாளர் திருமதி றெஜீனா இளஞ்செழியன் தலைமையில் 06/11/2022 அன்று பிற்பகல் மூன்று மணியளவில் நடை பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வட மாகாணசபை யாழ்,மாவட்ட உறுப்பினரும் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளருமான ந.விந்தன் கனகரட்ணம்,  முனைவர் சதீஸ்குமார் சிவலிங்கம்,சிரேஷ்ட உப தலைவர்,மலையக மக்கள் முன்ணணி,திருமதி அன்னலட்சுமி இராசதுரை, சிரேஷ்ட,வாழ் நாள் ஊடகவியலாளர் வீரகேசரி பத்திரிகை,திரு பெரியசாமி சீதாராமன் சிரேஷ்ட அறிவிப்பாளர் இலங்கை வானொலி சேவை,திரு செந்தில் வேலவர்,பிரதம ஆசிரியர் தினகரன் பத்திரிகை,கலைஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி பகிரவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு உதவிப் பொருட்கள் மற்றும் பரிசு பொருட்களையும் வழங்கி வைத்தனர்.மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றதோடு நிகழ்வின் உதவித்திட்டங்களுக்கும் நிகழ்வு ஏற்பாடுகளுக்கும் பூமணி அம்மா அறக்கட்டளை,மற்றும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை,ஆகியவற்றின் ஆதரவாளர்களும் அபிமானிகளுமான பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் திரு/திருமதி செல்வேந்திரன் லோகா குடும்பத்தினர், யாழ்,தீவகம் சரவணையைச் சேர்ந்த அமரர்களான இராசு மாணிக்கம் அவர்கள் ஞாபகார்த்தமாக நிதி அனுசரணை வழங்கியிருந்தனர். 

CO
CO
CO
CO
CO
CO
CO
CO
CO
CO
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!