போதைப்பொருள் பற்றாக்குறையினால் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகிய கைதிகள்

Prathees
1 year ago
போதைப்பொருள் பற்றாக்குறையினால்  கடும் அழுத்தத்திற்கு உள்ளாகிய கைதிகள்

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தின் சொத்துக்களையும் கலவரத்தில் ஈடுபட்ட மக்கள் சேதப்படுத்தியுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் நீண்டகாலமாக இந்த இடத்திற்கு அழைத்து வரப்படுவதால் முதல் மூன்று மாதங்களுக்குள் போதைப்பொருள் பற்றாக்குறையினால் அவர்கள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன் ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஐந்து கைதிகளுக்குக்கு மேலதிகமாக இராணுவ சிப்பாய் ஒருவரும் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

கைதிகள் குழுவொன்று முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியத்திற்குள் நுழைய முற்பட்டதில் படையினர் காயமடைந்துள்ளனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது..