யாழில் திடீரென குவிந்த இராணுவத்தினர் அச்சத்தில் மக்கள்

Kanimoli
2 years ago
யாழில் திடீரென குவிந்த இராணுவத்தினர் அச்சத்தில் மக்கள்

யாழில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றில் இருந்து ராணுவத்தினரால் முக்கியமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிட உள்ளதாக யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அண்மையில் விஜயம் ஒன்றை நீதியமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் மேற்கொண்டனர்.

இவர்களால் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக யாழில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய இன்று முதல் யாழின் முக்கியமான இடங்களில் ராணுவத்தினரால் சோதனை சாவடி அமைக்கப்பட்டு போதை பொருள் விநியோகம் மற்றும் போதை பொருள் பாவிப்போர் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் போதை பொருள் விற்பனை செய்வோர் மற்றும் போதைபொருள் பாவிப்போர் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள ராணுவ முகாமில் தகவல்களை தெரிவிக்கும் இடத்தில் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

இருப்பினும், இன்றிலிருந்து யாழில் போதை பொருளை கட்டுப்படுத்தும்மமுகமாக இராணுவத்தினரால் யாழின் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் எனவே பொதுமக்கள் இந்த விடயத்திற்கு நமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவே நமது எதிர்கால சந்ததியினரை போதைக்கு அடிமையாக்குவதற்கு நாங்கள் இடமளிக்காது போதைப் பாவனைக்கு அடிமையானவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவே சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

எனவே பொதுமக்கள் யாழில் போதை பொருள் பாவனையினை குறைப்பதற்கு எமக்கு முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!