உடஹமுல்ல கிழக்கு கிராம சேவையாளர் பிரிவின் நடைபாதையில் மின்சாரம் துண்டிப்பு

Kanimoli
1 year ago
 உடஹமுல்ல கிழக்கு கிராம சேவையாளர் பிரிவின் நடைபாதையில் மின்சாரம் துண்டிப்பு

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முன்னெடுத்த முதல் திட்டமான உடஹமுல்ல கிழக்கு கிராம சேவையாளர் பிரிவின் நடைபாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களாக மூன்றரை லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தாமையினால் துண்டிக்கப்பட்டுள்ளதாக மஹரகம மாநகர சபையின் மாநகர சபை உறுப்பினர் ருவன் ஜயசிங்க தெரிவித்தார்.

மஹரகம நகரசபையின் உடஹமுல்ல கிழக்கு கிராம அதிகாரி பிரிவின் மாதிவெல்ல மற்றும் அமுதெனிய பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இந்த நடைபாதை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் மின்சார விநியோகத்திற்காக, மாதிவெல பிரகதிபுர பிரதேசம் மற்றும் தெல்கஹவத்த பிரதேசத்தின் வீதிகளுக்கு சூரிய சக்தி அமைப்புக்கள் பொருத்தப்பட்டிருந்தன. எனினும் மூன்றரை இலட்சம் ரூபா மின்சார பட்டியல் உள்ள போதும் பணம் கிடைக்காத காரணத்தினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டணம் செலுத்தாததால், ஆறு மாதங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நடைபாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், மின்கம்பங்களின் சில பகுதிகள் திருடர்களால் திருடப்பட்டுள்ளன. 

எனவே மஹரகம நகரசபை உடனடியாக தலையிட்டு தாழ்நில அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்து பொதுமக்களை அசௌகரியங்களில் இருந்து விடுவிக்க தேவையான ஏற்பாடுகளை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.