திலினி பிரியமாலியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு

Kanimoli
2 years ago
திலினி பிரியமாலியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு

திலினி பிரியமாலியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டமை தொடர்பில் நடிகை ஒருவர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க (Jeewan Kumaranatunga) ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரனதுங்கவிற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, அந்த ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

திலினி பிரியமாலியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டமை மற்றும் ஜீவன் குமாரதுங்கவினால் தயாரிக்கப்பட்ட ஜீவா என்ற திரைப்படத்திற்கு அவர் நிதியுதவி வழங்கியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

திலினி பிரியமாலியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னதாக 4 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!