எரிவாயு விநியோகம் தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் - லிட்ரோ நிறுவனம்
Kanimoli
2 years ago
எரிவாயு விநியோகம் தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது.
மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் இன்று (08) முதல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாசாங்கு செய்யும் நோக்கில் சிலர் எரிவாயு இருப்புக்களை மறைத்து செயற்படுவதாகவும் அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
அதன்படி, இன்று காலைக்குள் 120,000 சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் முதித பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.