இலங்கை கிரிக்கெட் அணியைக் குறித்து ஆராய மூவர் கொண்ட குழு நியமனம்
இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்க சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து ஆராய்வதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சிசிர ரத்நாயக்க, சட்டத்தரணி நிரோஷன பெரேரா மற்றும் சட்டத்தரணி அசேல ரகேவா ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இதன்படி, அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் T20 உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து இந்தக் குழு விசாரணை நடத்தவுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்ற வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் அந்த சம்பவங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட குழு நடத்திய விசாரணையில் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.