வங்கி முகாமையாளரைக் கொலை செய்த கணவன் தப்பியோட்டம்
Prathees
2 years ago
ஹக்மன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் வங்கி முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹக்மன சாட்டியபொல சனச வங்கியின் சனச வங்கியின் முகாமையாளராவார்.
வங்கி முகாமையாளரின் கணவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலினால் தலையிலும் கழுத்திலும் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர், பிரதேசவாசிகளால் ஹக்மன கங்கோடாகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்திருந்தார்.
சந்தேக நபரின் கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.