ஆறு ஒன்றில் நீராடச்சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி
Kanimoli
2 years ago
காலி - கிங்தொட்ட பகுதியில் அமைந்துள்ள ஆறு ஒன்றில் நீராடச்சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (8) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாவின்ன அராப் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 மற்றும் 15 வயதுடைய மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.