T20 உலகக் கிண்ண தொடருக்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணியின் மேலும் சில வீரர்கள் குறித்து முறைப்பாடுகள்
Kanimoli
2 years ago
டி20 உலகக் கிண்ண தொடருக்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணியின் மேலும் சில வீரர்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அணியில் இடம்பெற்றிருந்த மேலும் சில வீரர்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
குற்றங்கள் தொடர்பில் எழுத்து மூலமான ஆவணங்கள் கிடைக்கப்பெறாத நிலையில், வீரர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச் சாட்டில் சிக்கியுள்ள, இலங்கை கிரிக்கெட் அணியின் தனுஷ்க குணதிலகவின் வழக்கு விசாரணை முடிவடைய சுமார் 10 மாதங்கள் வரை ஆகலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.