புதிய ஆளுநர்களை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க உரிய தரப்பினருடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள்
Kanimoli
2 years ago
புதிய ஆளுநர்களை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க உரிய தரப்பினருடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட 09 மாகாணங்களுக்குமான ஆளுநர்களை நீக்கிப் புதிய ஆளுநர்களை நியமிக்க அவர் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது மாகாண சபைகள், இயங்காத நிலையில் விரைவில் தேர்தல் ஒன்றை அடிப்படையாக கொண்டே புதிய ஆளுநர்களை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் விரைவில் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளை அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவொன்று முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.