கடனட்டைகள் தொடர்பிலான தகவலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது
Kanimoli
2 years ago
கடனட்டைகள் தொடர்பிலான தகவலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
இந்த வருடம் செப்டம்பர் மாத இறுதியில் நாட்டில் 1,917,839 கடனட்டைகள் செயற்பாட்டில் இருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 2022 இன் இறுதியில் செயற்பாட்டிலிருந்த 1,963,705 கடனட்டைகளுடன் இதனை ஒப்பிடுகையில் 8,134 கடனட்டைகள் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், செப்டம்பர் 2022 இறுதியில் இந்த கடனட்டைகளுக்கான மொத்த நிலுவைத் தொகை ரூ.136,766 மில்லியன் ரூபாவாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.