பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கை!
பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 25 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தரம் 12 இல் கல்வி பயின்ற மாணவர்களே அந்தப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அனைத்து விண்ணப்பங்களையும் தாங்கள் கல்வி கற்ற பாடசாலையின் அதிபரினால் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் எனவும் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட விதத்தில் இந்த பரீட்சைக்கு தோற்ற முடியாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2022 (2023) உயர்தர பரீட்சை நடைபெறும் காலத்தில் இந்தத் பரீட்சை நடத்தப்படாது எனவும் பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.