கோட்டபாய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியமைக்கான காரணத்தை வெளியிட்ட அமைச்சர்

Kanimoli
3 years ago
கோட்டபாய ராஜபக்ச  நாட்டை விட்டு வெளியேறியமைக்கான காரணத்தை வெளியிட்ட  அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச  நாட்டை விட்டு வெளியேறியமைக்கான காரணத்தை முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

வெளிநாட்டு கொள்கை தான் கோட்டபாய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியமைக்கான காரணம் எனவும் அவர்  இதன்போது  சுட்டி காட்டி உள்ளார்.

அத்தோடு அவர் வெளிவிவகார கொள்கையை முறையாக கடைபிடிக்காமையினாலே அவர் நாட்டை விட்டு வெளியேறினார் என  சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவை தவிர்த்த  இந்தியா மற்றும் அமெரிக்கா
அத்துடன் பொருளாதாரம் தொடர்பிலான முறையான ஆலோசனைகளை அவர் ஏற்றுக்கொள்ளாமையும் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக அமைந்ததாகவும் அவர்  குறிப்பிட்டார்.

இதன் ஒட்டுமொத்த பிரதிபலனாகவே கோட்டாபய ராஜபக்சவிற்கு உதவுவதிலிருந்து அமெரிக்கா மற்றும் இந்தியா  என்பன  பின்வாங்கிக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

எனவே  தவறுகளை உணர்ந்து நாங்கள் மீளெழுவதற்கான சந்தர்ப்பத்தை இனங்காண வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4