சீன கரிம உரக் கப்பலின் பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு அதிகாரி நியமனம்!

Mayoorikka
2 years ago
சீன கரிம உரக் கப்பலின் பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு அதிகாரி நியமனம்!

சீன கரிம உரங்களை ஏற்றுமதி செய்தமை மற்றும் இலங்கை அரசாங்கம் செலுத்திய 6.7 மில்லியன் டொலர்கள் தொடர்பில்  இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியிலான தீர்வை வெளிவிவகார அமைச்சு கோரவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பதற்கு விசேட அதிகாரி ஒருவரை வெளிவிவகார அமைச்சு நியமித்துள்ளது.

விவசாய அமைச்சின் அதிகாரிகள் அந்த அதிகாரிக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவார்கள் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோருக்கு இடையில் நேற்று (வியாழக்கிழமை) விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இந்த முடிவை அறிவித்தார்.

சீன கரிம உரத்தின் கப்பல் ஏற்றம் குறித்து இலங்கைக்கும் சீன அரசாங்கத்துக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை சேதப்படுத்தாத வகையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு வெளிவிவகார அமைச்சரின் ஆதரவை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, முன்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கரிம உரக் கப்பல் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!