நாடளாவிய ரீதியில் உள்ள சதொச கடைகளில் மதுபானம் விற்பனை?

Mayoorikka
2 years ago
நாடளாவிய ரீதியில் உள்ள சதொச கடைகளில்   மதுபானம் விற்பனை?

நாடளாவிய ரீதியில் 300 சதொச கடைகளுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்க கலால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி, கலால் அறிவிப்பு பிரிவு 902க்கு உட்பட்ட அனைத்து சதொச கடைகளுக்கும் உடனடியாக மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் மதுபான அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்த சில சதொச நிறுவனங்கள் உரிய தகுதிகளை பூர்த்தி செய்யாததாலும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாகவும் இந்த உரிமங்கள் வழங்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த சில சதொச கடைகளுக்கு இந்த அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உரிய அனுமதிப்பத்திரங்களை அங்கீகரித்ததன் பின்னர், சதொச நிறுவனங்களில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் கலால் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!