யாழ் மாவட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் விசேட அறிவிப்பு!
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களின் அவசர உதவிகளுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 0773957894 , 0212117117 அல்லது 117 எனும் இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலை யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா விடுத்துள்ளார்.