15 வயதான சிறுமியை திருமணம் செய்வதற்கு முயற்சித்த நிலையில் பெற்றோர் அதனை தடுத்ததால் சிறுமியின் வீடு தீக்கிரை
யாழ்.ஏழாலை பகுதியில் 15 வயதான சிறுமியை திருமணம் செய்வதற்கு முயற்சித்த நிலையில் பெற்றோர் அதனை தடுத்ததால் சிறுமியின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்வதற்காக சிறுமியின் குடும்பத்தினருக்கு பல்வேறு சிக்கல்கள் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் இரவு வீட்டுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் வீட்டை தீவைத்துக் கொழுத்தியுள்ளது.
4 பேர் கொண்ட கும்பலினால் வீடு தீக்கிரையாக்கப்பட்டதாக சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நேற்று இரவு சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் இரு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதுடன் காலை முறைப்பாடு செய்யுமாறு கூறி சென்றதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காலை சென்று முறைப்பாடு அளித்தபோதும் இதுவரையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என விசனம் வெளிடப்பட்டுள்ளது.