பயிர்ச் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு இழப்பீடு
Mayoorikka
2 years ago
2021/22 பருவ காலத்தில் பயிர்ச் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை 800 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
அந்த வகையில், குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த 2535 விவசாயிகளுக்கு 33 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
குருநாகல் மாவட்டத்திற்குத் தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் விநியோகம், எரிபொருள் மற்றும் கால்நடைத்துறை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.