வாகனங்களின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது!
Mayoorikka
2 years ago
நாட்டின் சந்தையில் வாகனங்களின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வட்டி வீத அதிகரிப்பு மற்றும் உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு என்பனவே வாகனங்களின் விலை குறைவதற்குக் காரணம் என சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்தார்.
மேலும், ஆக்ஸியோ, பிரீமியோ, ரைஸ், சிஎச்ஆர், வெசல், வேகன் ஆர், பாஸோ, விட்ஸ், கிரேஸ் போன்ற பல வகை கார்களின் விலைகள் குறைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.