பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு
பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை இன்று (11.11.2022) வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோ இந்திய வெங்காயத்தின் விலை 285 முதல் 290 ரூபா வரையிலும், ஒரு கிலோ இலங்கை பெரிய வெங்காயத்தின் விலை 340 முதல் 350 ரூபா வரையிலும் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒரு கிலோ இலங்கை உருளைக்கிழங்கின் விலை 360 முதல் 380 வரையிலும், ஒரு கிலோ சீன உருளைக்கிழங்கின் விலை 210 முதல் 220 வரையிலும், ஒரு கிலோ பாகிஸ்தான் உருளைக்கிழங்கு 180 முதல் 190 வரையிலும் விற்கப்படுவதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 550 ரூபா, ஒரு கிலோ வெள்ளை உப்பு 380 முதல் 390 ரூபா என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கோட்டை மொத்த சந்தையில் வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் என வர்த்தகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.