யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் மீது தாக்குதல்...
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தின் நுழைவு வாயிலில் வைத்து போத்தல் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
நுழைவு வாயில் பொருத்தப்பட்டிருந்த துணைத் தூதரக அலுவலகத்திற்கு முன்பாக மருதடி வீதியில் சென்ற வாகனம் மீது போத்தல் தாக்குதல் இடம்பெற்றதையடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தரால் யாழ்.பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
பின்னர் யாழ்.பொலிஸ் அதிகாரிகள் துணைத் தூதரக அலுவலகத்திற்கு வந்து சோதனையிட்டதில் நுழைவாயிலுக்கு அருகாமையில் உடைக்கப்பட்ட போத்தலைக் கண்டெடுத்ததுடன் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் சோதனையிட்டனர்.
பின்னர், இது தொடர்பான தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் யாழ்.மாவட்டத்தில் வசிக்கும் இருவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்த பொலிஸார், தாக்குதல் தொடர்பான சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி வாகனத்தில் பயணித்த போது மது அருந்திய போது தவறுதலாக போத்தலை வீசி எறிந்துள்ளதாகவும் இது இந்திய துணைத் தூதரக அலுவலகத்தின் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் இல்லை எனவும் யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், மதுபானம் அருந்தியமை மற்றும் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.