கந்தளாய் குளத்தின் மூங்கில் ஆற்றினை கடக்க முற்பட்ட போது நீரில் மூழ்கி ஒருவர் பலி

Kanimoli
2 years ago
கந்தளாய் குளத்தின் மூங்கில் ஆற்றினை கடக்க முற்பட்ட போது நீரில் மூழ்கி ஒருவர் பலி

திருகோணமலை கந்தளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கந்தளாய் குளத்தின் மூங்கில் ஆற்றினை கடக்க முற்பட்ட போது நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்றையதினம் (10) இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் மாட்டுப்பட்டிக்கு மாடுகளை பார்ப்பதற்காக மாட்டு உரிமையாளருடன் சென்ற போது மூங்கில் ஆற்றினை கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது, அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வான்எல பகுதியைச் சேர்ந்த சுபைதீன் ரமீஸ் என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!