அனைத்து அரசு சேவைகளுக்கும் ஒருங்கிணைந்த பொறிமுறை அமைக்கப்படும்: தேசிய பேரவை உபகுழு

Mayoorikka
1 year ago
அனைத்து அரசு சேவைகளுக்கும் ஒருங்கிணைந்த பொறிமுறை அமைக்கப்படும்: தேசிய பேரவை உபகுழு

அனைத்து அரசாங்க சேவைகளுக்கும் ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்குவதற்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை உருவாக்குவதற்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதில் தேசிய பேரவை உபகுழு கவனம் செலுத்துவதாக அதன் தலைவர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரச சேவைக்கான முக்கிய செயல்திறன் குறிகாட்டியை நிறுவுவதற்கான கொள்கைகளை உருவாக்குவது குறித்து ஆலோசிப்பதற்காக உபகுழு கூடிய போது அதன் தலைவர் இதனைத் தெரிவித்ததாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் அரச இயந்திரம் தொடர்பான சேவைகளை ஒருங்கிணைக்கும் சட்டத் தடைகள் மற்றும் தற்போது செயற்படும் பிரதான செயற்திறன் குறிகாட்டிகளை கருத்திற்கொள்ளும் போது ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ளார்ந்த வேறுபாடுகள் காணப்படுவதாக தலைவர் அங்கு குறிப்பிட்டுள்ளார். 

அனைத்து அரச சேவைகளுக்கும் சமமாக அமுல்படுத்தக்கூடிய முக்கிய செயற்திறன் சுட்டெண் ஒன்றை உருவாக்குவது சவாலாக உள்ளதாகவும் மேலும், பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதில் வினைத்திறனான அரச சேவையை கட்டியெழுப்புவது தமது குழுவின் நோக்கமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கு தெரிவித்துள்ளார். .

 நாடளாவிய ரீதியில் அனைத்து சேவை பிரதிநிதிகளின் கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் ஆதரவினால் அந்த பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது என   தேசிய பேரவை உபகுழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும்  தெரிவித்தார்.