இரு அமைச்சர்களுக்குமிடையில் விஸ்வரூபம் எடுத்துள்ள கருத்து மோதல்

Prathees
1 year ago
இரு அமைச்சர்களுக்குமிடையில் விஸ்வரூபம் எடுத்துள்ள  கருத்து மோதல்

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிற்கும் இடையில் கடும் கருத்து மோதல் ஆரம்பமாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆளுங்கட்சி கூட்டத்தில் இரு அமைச்சர்களுக்குமிடையிலான இந்த கருத்து மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நாட்டில் போதியளவு அரிசி இருப்பு இருப்பதாலும், எதிர்காலத்தில் அதிகளவு கையிருப்பு கிடைக்கும் என்பதாலும், மேலும் அரிசியை இறக்குமதி செய்வது உள்ளூர் விவசாயியை அநாதரவாக்கும் என விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அரிசி இறக்குமதியை நிறுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் இதற்குப் பதிலளித்துள்ள வர்த்தக அமைச்சர் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சந்தையில் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

உணவு நெருக்கடியைத் தவிர்ப்பதற்காகவே கடந்த காலங்களில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, அரிசி இறக்குமதி நெருக்கடி தொடர்பாக, நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள உணவுப் பாதுகாப்புக் குழுவை அழைத்து முடிவெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.