இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்த அரசாங்கம் திட்டம்

Prathees
2 years ago
இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்த அரசாங்கம்  திட்டம்

இலங்கையில் விவசாயத்தில் இளம் தொழில்முனைவோருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் விவசாயத்தின் எதிர்காலத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் கூறினார்.

உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நாட்டில் விவசாயம் செய்யக்கூடிய எந்தவொரு அரச காணியும் விவசாயம் செய்யாமல் விடப்படக் கூடாது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாட்டுக்கு கிடைக்கும் ஒவ்வொரு டொலரும் சேமிக்கப்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!