இளம் செயற்பாட்டாளர் நிர்மன்லி லியனகே உயிரிழப்பு
Kanimoli
2 years ago
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் திடீர் மாரடைப்பு காரணமாக இளம் செயற்பாட்டாளர் நிர்மன்லி லியனகே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்தோடு இவர் நேற்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட குடிமகன் பேச்சு விவாதத்திலும் கலந்து கொண்டதாக கூறப்படுன்கிறது.
நிர்மன்லி லியனகே வரலாற்று சிறப்புமிக்க கோட்டகோகம எதிர்ப்பு தளத்தில் பிரஜைகள் மன்றத்தை நிறுவுவதில் முக்கிய பங்காற்றி உள்ளார் என தெரிய வந்துள்ளது.
அத்தோடு இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடிமக்களுக்கு அவர்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயக செயல்முறைகள் குறித்து அறிவூட்ட உழைத்துள்ளார்.
இளம் திறமையான ஆர்வலர் திடீர் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் பல ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.