இலங்கையில் வயது வந்தோரில் 15 சதவீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

Mayoorikka
1 year ago
இலங்கையில் வயது வந்தோரில் 15 சதவீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

இன்று உலக  நீரிழிவு நோய்  தினம். விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தைக் காப்போம் என்பதே இந்த ஆண்டு உலக நீரிழிவு தினத்தின் கருப்பொருளாகும். உலகளவில் நீரிழிவு நோயாளிகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் நீரிழிவு மற்றும் நாளமில்லா நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் மணில்கா சுமனதிலக்க உரையாற்றினார்.

இந்நாட்டில் முதியோர்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் மேல் மாகாணத்தில் வயது முதிர்ந்தவர்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்க உணவுமுறை மிகவும் முக்கியமானது என வைத்தியர் மணில்க சுமணதிலக்க மேலும் சுட்டிக்காட்டினார்.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஜானக வண்ணகு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மருந்தை விட உணவின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டினார்.