இலங்கைக்கு சீனாவினால் நன்கொடையாக எரிபொருள் வழங்க இணக்கம்!
Mayoorikka
2 years ago
இலங்கைக்கு 10.6 மில்லியன் லீற்றர் எரிபொருளை நன்கொடையாக வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
விவசாயம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சீனாவினால் வழங்கப்படும் எரிபொருள் பயன்படுத்தப்படவுள்ளது.
குறித்த எரிபொருள் டிசம்பர் மாதத்துக்குள் இலங்கைக்கு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எரிபொருள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க சீனாவினால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.