நவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணி: வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பம்

Mayoorikka
1 year ago
நவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணி: வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பம்

பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (14) பிற்பகல் ஆரம்பமானது.

இதன்போது 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது ஆரம்பித்துள்ளார்.

2023 ஆம் நிதி ஆண்டுக்கான அரசாங்க செலவீனத்திற்கு 7,885 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி தெரித்த விடயங்கள்,

21ஆம் நூற்றாண்டின் நவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணி, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக ஆரம்பிக்கப்படும்.

நாட்டின் நீண்டகால (2023-2048) அபிவிருத்தி, பிரபலமான தீர்மானங்களில் அன்றி, சரியான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டது.

இளைஞர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக, ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் போன்ற பாரம்பரிய அரசியல் முறைகளுக்கு அப்பாற்பட்ட புதிய வேலைத்திட்டங்கள், புதிய அணுகுமுறையின் மூலம், இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உகந்த புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம்.

பரிச்சயமான சமூக வாழ்க்கை முறையானது மீண்டும் கீழ்மட்டத்திற்கு வீழ்ச்சியடையாத வகையில் புதிய பயணம் ஆரம்பிக்கப்படும்.

தனிநபர் வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைக்குப் பதிலாக இளைஞர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கை முறைக்கு உகந்த வகையில் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய பொருளாதார முறைமை.

உலகின் புதிய போக்குகளுக்கு ஏற்றவாறு புதிய பொருளாதார அடித்தளத்தை தயாரிக்க வேண்டும்.

வறிய மற்றும் நலிவடைந்த குழுக்களைப் பராமரிப்பது தொடர்பில் முழுமையான கவனம்.

தனியார் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கவும் தேவையான வசதிகள் வழங்கப்படும். அவர்களின் பணியை மேலும் திறம்படச் செய்யும் வகையில் கொள்கைகள் தயாரிக்கப்படும்.

ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டித்தன்மைமிகு பொருளாதாரம்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த பச்சை மற்றும் நீலப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் என்பன தொடர்பில் புதிய பொருளாதாரத்தின் கீழ் விசேட கவனம்.

உலகளாவிய போக்கைக் கருத்தில் கொண்டும் குறிப்பாக காலநிலை மாற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியும் சமூக பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதார மாற்றத்திற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்கள் என்பன விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

சமூக சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் 7% - 8% உயர் பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் 7% - 8% உயர் பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச வர்த்தகத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 %ஆக அதிகரிப்பதற்கான நடவடிக்கை.

2023 - 2032 காலப்பகுதியில் புதிய ஏற்றுமதிகளின் ஊடாக 3 பில்லியன் டொலர் வருடாந்த வருமான அதிகரிப்பு எதிர்பார்க்கப்படும்.

அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 03 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியை நேரடி முதலீடாக பெறுவதற்கான திட்டங்கள்.