அரசியலமைப்புச் பேரவைக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது!
21வது திருத்தச் சட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட அரசியலமைப்புச் பேரவைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாத உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களாக நியமனம் செய்வதற்காக, எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்காத, பொது அல்லது தொழில் வாழ்க்கையில், தனித்துவம் மிக்க மற்றும் நேர்மையானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள், நாடாளுமன்ற இணையத்தளமான www.parliament.lk இல் கிடைக்கும் மாதிரியின்படி, 2022 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
‘அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களின் நியமனம்’ என்று விண்ணப்ப உறையின் மேல் இடது மூலையில் குறிப்பிடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.