2023 இற்கான வரவுசெலவுத்திட்டத்தில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் போதுமா? ஆய்வாளர்களிடையே முரண்பட்ட கருத்துக்கள்
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை என வரவு செலவுத் திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், அதன் உள்ளடக்கங்களில் அவ்வாறான பாரிய சீர்திருத்தங்கள் காணப்படவில்லை என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில் அடிப்படை பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியந்த துனுசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கலாநிதி பிரியந்த துனுசிங்க சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், கல்வித் துறை போன்ற துறைகளில் கட்டமைப்பு முகமூடிகளுக்குப் பதிலாக பாரம்பரிய முன்மொழிவுகள் காணப்படுவதாக பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.