மக்களின் கொள்வனவு இயலுமையை வலுப்படுத்த உதவிகளை வழங்க ஜெனீவா அரசாங்கம் தீர்மானம்

Prasu
2 years ago
மக்களின் கொள்வனவு இயலுமையை வலுப்படுத்த உதவிகளை வழங்க ஜெனீவா அரசாங்கம் தீர்மானம்

ஜெனீவா மக்களின் கொள்வனவு இயலுமை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனை ஈடு செய்ய உதவிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மானியங்கள், வீட்டுக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மக்களின் கொள்வனவு இயலுமையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக நலன்புரி கொடுப்பனவு பெற்றுக் கொள்வோருக்கான குடும்ப கொடுப்பனவு தொகையும் அதிகரிக்கப்பட உள்ளது. அண்மைய நாட்களாக நிலவி வரும் பணவீக்கம் காரணமாக மக்களின் கொள்வனவு இயலுமை வீழ்ச்சியடைந்துள்ளது.

குறிப்பாக மத்திய தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவு இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார காப்பீட்டு தவணைக் கட்டண மானியங்கள், வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் சமூக நலன்புரி கொடுப்பனவுகள் என்பன இவ்வாறு வழங்கப்பட உள்ளதாக ஜெனீவா கான்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!