பிரிட்டனில் இருந்து திரும்பிய பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு (வயது 71) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எகிப்தில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்ற அவர் அங்கிருந்து, தனது மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க லண்டனுக்கு சென்று அங்கிருந்து பாகிஸ்தான் திரும்பிய மறுநாள் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மரியம் அவுரங்கசீப் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யும்படி நாட்டு மக்கள் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மூன்றாவது முறையாக பிரதமருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மற்றும் 2020 ஜூன் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.