விர்ஜீனியா பல்கலைக்கழக வளாக துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழப்பு - குற்றவாளி கைது

#America #GunShoot #Death #Arrest
Prasu
1 year ago
விர்ஜீனியா பல்கலைக்கழக வளாக துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழப்பு - குற்றவாளி கைது

அமெரிக்க நாட்டில் வாஷிங்டன் என்று நகரம் அமைந்துள்ளது. இந்த நகருக்கு  சுற்றுலா சென்று விட்டு மாணவ மாணவிகள் அடங்கிய பேருந்து ஒன்று விர்ஜீனியா பல்கலைக்கழகத்திற்கு திரும்பி கொண்டு இருந்தது. 

இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை அன்று இரவு 10.30 மணியளவில் அந்தப் பேருந்தை நோக்கி திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  மேலும் படுகாயமடைந்த 2 பேரில் ஒருவரது நிலைமை படுமோசமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் பல்கலை கழக வளாக பகுதியில் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதில், சந்தேக நபரான கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் ஜூனியர் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர் என்று தெரிய வந்துள்ளது. அவர்  மீது கொலை மற்றும் கைத்துப்பாக்கி பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. இதனை தொடர்ந்து வளாகத்தில் விதிக்கப்பட்டு இருந்த தடையுத்தரவு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் கைது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, “ஹென்ரிகோ கவுன்டி பகுதியில் சார்லட்ஸ்வில்லே நகரிலிருந்து 80 மைல் கிழக்கே, வாகனம் ஒன்றை அவர் ஓட்டி செல்லும்போது, அவரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். 

துப்பாக்கி சூடு நடத்திய 3 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் டெவின் சாண்ட்லர், லேவல் டேவிஸ் ஜூனியர் மற்றும் டி சீயான் பெர்ரி என தெரிய வந்துள்ளது. நடப்பு ஆண்டில் அமெரிக்க நாட்டில் பெரியளவில் 600 துப்பாக்கி சூடு சம்பவங்கள் வரை நடந்துள்ளன என துப்பாக்கி வன்முறை சம்பவங்களின் தொகுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அவற்றில் இந்த சம்பவமும் ஒன்றாகும். இங்கு பள்ளி விளையாட்டு மைதானங்களில் நடப்பு ஆண்டில் இதுவரை 68 துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இவற்றில் கல்லூரி வளாகங்களில் நடந்த 15 சம்பவங்களும் அடங்கும். ஒவ்வொரு சம்பவத்திலும் குற்றவாளியால் குறைந்தது ஒருவர் சுடப்பட்டுள்ளார். 

அமெரிக்க நாட்டின் வரலாற்றிலேயே கொடூர துப்பாக்கி சூடு கடந்த 2007-ஆம் ஆண்டு நடந்ததை கூறலாம். பிளாக்ஸ்பர்க் நகரிலுள்ள விர்ஜீனியா டெக்கில் 32 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள 23 வயது மாணவர் பின்னர் தற்கொலை செய்து கொண்டார்” என்று கூறியுள்ளனர். 

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது வேதனை ஏற்படுத்துகிறது என்றும் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். 

அதற்கான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பெரியளவில் அதனால் பலன் ஏற்படாத சூழல் உள்ளது. 

இதனை தொடர்ந்து, நடப்பு ஆண்டில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.