பிரித்தானியாவில் மனைவிக்கு தீ வைத்த கணவர் - ஆச்சரியத்தில் வைத்தியர்கள்

Nila
1 year ago
பிரித்தானியாவில் மனைவிக்கு தீ வைத்த கணவர் - ஆச்சரியத்தில் வைத்தியர்கள்

பிரித்தானியாவில் 1998ஆம் ஆண்டில் மனைவியைப் பெட்ரோல்  ஊற்றிக் கொளுத்திய பிரித்தானிய நபருக்கு  (10 நவம்பர்) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக 58 வயது Steven Craig குறைந்தது 15 ஆண்டுகளைச் சிறையில் கழிக்கவேண்டியிருக்கும் என்று நீதிபதி ஒருவர் கூறினார்.

உடலில் மோசமான காயங்களை ஏற்படுத்தியதற்காக ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனையை கிரேக் நிறைவேற்றியிருக்கிறார். 

கிரேக், மனைவி Jacqueline Kirk கொளுத்தியதில் அவரது உடலின் 35 சதவீத பகுதிகளில் தீக்காயங்கள் ஏற்பட்டன.

மருத்துவர்கள் அவர் நீண்டகாலம் உயிர்பிழைக்கமாட்டார் என்று கருதினர். 

ஆனால் கர்க் அப்போதிருந்து 2019ஆம் ஆண்டு வரை சுமார் 21 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தார். அவர் தமது 2 பிள்ளைகள் திருமணம் செய்துகொண்டு பிள்ளை பெற்றெடுக்கும் வரை உயிர்வாழ்ந்தது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது. 

அவர் 2019ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம், வயிற்றில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் அவர் உயிரிழந்துள்ளார்.

தீயினால் அவரது நெஞ்சிலும் வயிற்றிலும் உண்டான காயங்களின்  காரணமாக அவருக்கு அந்தப் பிரச்சினை ஏற்பட்டது என்றும் அதனால் அவர் உயிரிழந்துள்ளார் என்றும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்ட கிரேக், மனைவியின் மரணத்துக்குப் பொறுப்பேற்க மறுத்தார். 

இந்நிலையில் தமது தாயார், அவருடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் முக்கியத்  தருணங்களைக் கண்டு அனுபவித்தார் என்றும் அதுவே மிக முக்கியமானது என்றும் கர்க்கின் மகள் ஊடகத்திடம் கூறினார்.