பிரித்தானியாவில் அதிகரிக்கும் பணவீக்கம்- மக்களுக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி !

Nila
1 year ago
பிரித்தானியாவில் அதிகரிக்கும்  பணவீக்கம்- மக்களுக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி !

பிரித்தானியாவில் 2024ஆம் ஆண்டின் பாதி வரை பொருளாதார மந்த நிலை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் உச்சக்கட்ட அதிகரிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அதனை தவிர்க்க முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது.

இந்த நிலையில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வட்டி விகிதத்தில் 75 அடிப்படை புள்ளிகளை நாட்டின் மத்திய வங்கியான Bank of England உயர்த்தியுள்ளது.

இதனை தொடர்ந்து வட்டி விகிதம் 3 சதவீதமாக உயர்ந்து 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச அளவை எட்டியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

Bank of England நாணய கொள்கை கூட்டத்தில் வட்டியை உயர்த்துவது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 7 வாக்குகள் ஆதரவாகவும், 2 வாக்குகள் எதிர்ப்பாகவும் பதிவாகின. 

பிரித்தானியாவில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து வட்டி விகிதமானது 0.1 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த செப்டம்பர் மாதத்தில் 10.1 சதவீதமாக உயர்ந்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட பணவிக்கம் 2 மடங்கு வேகமாக அதிகரிப்பதாக இங்கிலாந்து மத்திய வங்கியான Bank of England தெரிவித்துள்ளது. 

மேலும் நாட்டின் பொருளாதாரம் 2023ஆம் ஆண்டு முழுவதும் மந்த நிலையிலேயே இருக்கும் என்றும், 2024ஆம் ஆண்டின் பாதி வரை இந்த நிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் கடுமையான பணவீக்கத்தையும் பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்ள நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.

எனினினும் அதுவரையில் மக்கள் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.