போதைப் பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது!

Prabha Praneetha
3 years ago
போதைப் பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது!


வவுனியா, பாவற்குளம் பகுதியில் மூன்று இளைஞர்கள் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக உளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, உளுக்குளம் பொலிசார் நேற்று  விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, வவுனியா பாவற்குளம் பகுதியில் உள்ள பன்சாலை வீதி ஊடாக சென்ற மூன்று இளைஞர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொலிசார், அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் இருந்து 50 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மூன்று இளைஞர்களும் உளுக்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 – 25 வயதிற்குட்பட்ட வவுனியா சூடுவெந்தபுலவு மற்றும் பாவற்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிசார், மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4