செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க தீர்மானம்
Prasu
2 years ago
இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் விசேட முன்னோடி வேலைத்திட்டம் கம்பஹா மாவட்டத்தில் இன்று (16) ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்காக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஶ்ரீலங்கா செவிப்புலன் வலுவற்றோர் மத்திய சம்மேளனம் சுமார் 40 வருடங்களாக முன்வைத்த கோரிக்கைக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த முன்னோடி வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தின்படி, ஶ்ரீலங்கா செவிப்புலன் வலுவற்றோர் மத்திய சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் நாடளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 300,000 பேர் எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.